Book review

ஆப்ரிக்கக் கண்டத்தின் எங்கோவொரு தொலைதூரத்தில் ஒற்றைக்காலோடு மிதிவண்டி அழுத்துகிற ஒருத்தனின் வலியை, நம்பிக்கையை, லட்சியநோக்கை, வென்றுகாட்டுதலை… இங்கு மதுரையில் வசிக்கும் ஒரு சிறுமி அவனது கதையை வாசிப்பதன் வழியாக உணர்ந்திருக்கிறாள். தும்பியின் ‘இமானுவெலின் கனவு’ கதைக்கு அவளெழுதியனுப்பிய அந்த மனவெளிப்பாட்டுக் கடிதம், இருண்ட கண்டத்திலிருந்து எழுந்த பெருவொளியாக இமானுவெலை நினைக்கவைக்கிறது. கானா தேசத்தை தன் மிதிவண்டியாலேயே சுற்றிவந்து, ஒற்றைக்காலோடு நின்று முடிவெல்லையைத் தொட்ட அவன் கண்ணீர்ச்சிரிப்புக்குப் பின்னால்… இந்தச் சிறுமியின் கைதட்டலோசையும் கலந்திருக்கிறது. மனதுக்கு மிகுந்த நம்பிக்கையளிக்கும்

தும்பி 19வது இதழ் அச்சுக்குச் செல்கிறது.

கோயம்புத்தூர் குமார் சண்முகத்தின் இளைய குழந்தை இனியா. அவள் வசிக்கும் தெருவில் நாலைந்து சிறு நாய்கள் அலைகிறது. அவைகளில் ஒன்றுக்கு இனியா ‘ப்ரவ்னி’ என பெயர் வைத்திருக்கிறாள். ப்ரவ்னி என அவள் குட்டிக்குரலால் கூப்பிடும்பொழுது வாலைஆட்டி குலைந்துகொண்டே அவளிடம் வருகிறது அந்நாய்க்குட்டி. கையில் வைத்திருக்கும் லாலிபப் மிட்டாயை ஒருதடவை தான் நக்கிவிட்டு, நாயிடம் நீட்டுகிறாள். அதுவும் ஒருதடவை மிட்டாயை நக்கிச்சுவைக்கிறது. மீண்டும் இனியா சுவைக்கிறாள். மீண்டும் புரவ்னி சுவைக்கிறது. இப்படியே மாறிமாறிநீள்கிறது அவர்களிருவரின் மிட்டாய் சுவைத்தல். ச்சீ…

வாழ்க்கையை நாம் எப்படிப்பார்க்கிறோம்

வாழ்க்கையை நாம் எப்படிப்பார்க்கிறோம் என்பதே கேள்வி. வாழ்க்கையை ‘கடுமையான போட்டியின் வழியாக உலகியல் வெற்றியை ஈட்டி மகிழ்ச்சியுடன் வாழவேண்டிய ஒரு களம்’ என நீங்கள் வகுத்துக்கொண்டிருந்தால் எந்த பள்ளியில் அதிக மதிப்பெண் எடுக்கச்செய்கிறார்களோ அதுவே உங்கள் தேர்வு. மாறாக வாழ்க்கை என்பது பலவகையான மகிழ்ச்சிகளின் களம் என நீங்கள் புரிந்துகொண்டிருந்தீர்கள் என்றால், கண்டடைதலும் வளர்ச்சி பெறுதலும் இன்பங்களில் தலையாயவை என நினைத்தீர்கள் என்றால் உங்கள் தெரிவு பிறிதொன்றாகவே இருக்கும். ஒரு குழந்தைக்கு ஒரேயொரு இளமைப்பருவம்தான். அதன் உற்சாகத்தையும்