Thumbi 19
வாணி அக்கா, தனது மகன் ஹிரித்திக்-க்கு தும்பியின் பதினைந்தாவது கதையான ‘ஜாஸ்மின்’ பூனைக்கதையை சொல்லிக்கொண்டிருக்கிறார். கதைப்படி பூனை ஒரு பூட்டிய வீட்டுக்குள் மாட்டிக்கொள்கிறது. வெளியில்வர வழிதெரியாத அப்பூனை தன் நகங்களால் கதவைக் கீறுகிறது. இப்படி ஒவ்வொன்றாக காட்சியைச் சித்தரிக்கையில் , திடீரென இடைமறித்து ஹிரித்திக் சொல்கிறான், “இதுக்குதாம்மா… ஒரு யானைய வளக்கனும். இந்த இடத்துல யான மட்டும் இருந்துச்சுனா டமால்ன்னு கதவ உடச்சு பூனைய காப்பாத்தி இருக்கும்!” ஒருகணம் நின்று யோசித்துவிட்டு “சரிசரி மிச்ச கதைய கேளு”