We now ship worldwide. Place your orders today.

Book review

ஆப்ரிக்கக் கண்டத்தின் எங்கோவொரு தொலைதூரத்தில் ஒற்றைக்காலோடு மிதிவண்டி அழுத்துகிற ஒருத்தனின் வலியை, நம்பிக்கையை, லட்சியநோக்கை, வென்றுகாட்டுதலை… இங்கு மதுரையில் வசிக்கும் ஒரு சிறுமி அவனது கதையை வாசிப்பதன் வழியாக உணர்ந்திருக்கிறாள்.

தும்பியின் ‘இமானுவெலின் கனவு’ கதைக்கு அவளெழுதியனுப்பிய அந்த மனவெளிப்பாட்டுக் கடிதம், இருண்ட கண்டத்திலிருந்து எழுந்த பெருவொளியாக இமானுவெலை நினைக்கவைக்கிறது.

கானா தேசத்தை தன் மிதிவண்டியாலேயே சுற்றிவந்து, ஒற்றைக்காலோடு நின்று முடிவெல்லையைத் தொட்ட அவன் கண்ணீர்ச்சிரிப்புக்குப் பின்னால்… இந்தச் சிறுமியின் கைதட்டலோசையும் கலந்திருக்கிறது.

மனதுக்கு மிகுந்த நம்பிக்கையளிக்கும் பகிர்வு. நம்மிடம் இதைச்சேர்ப்பித்த அச்சிறுமியின் அம்மாவுக்கும், அவளின் திசைச்சுதந்திரத்தை தீர்மானிக்கும் அவள் அப்பாவுக்கும் ஓசையற்ற ஒருநூறு நன்றிகள்…